இடுகைகள்
செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆத்திக கலைஞர் ! பகுதி -2
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
27 ஜனவரி 1989 பதினான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார் தலைவர் கலைஞர். எம்.ஜி.ஆரின் பொறுப்பற்ற 14 ஆண்டுக் கால பணக்கார சார்பு ஆட்சியில் எல்லாத்துறைகளும் சிதைந்து சிதிலமடைந்து கிடந்தன. அதில் அறநிலையத்துறையும் ஒன்று. 10.9.1989 - காலையில் தலைமைச் செயலகத்தை நோக்கி சமயச் சான்றோர்கள் , ஆன்மிகப் பெரியவர்கள் , தமிழறிஞர்கள் , மடாதிபதிகள் , எழுத்தாளர்கள் , சாமியார்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தார்கள். அது கோட்டையா கோவிலா என்று தெரியாத வண்ணம் மாற்றியிருந்தார் முதல்வர் கலைஞர்! கோவில்கள் ஆன்மிக தலங்கள் மட்டுமல்ல , தமிழ்ப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சிற்பக் கலையையும் தொன்மையையும் பறைசாற்றுபவை. அதனால் அதனைப் புனரமைக்க தவத்திரு குன்றக்குடி அடிகளார் , முன்னாள் நீதியரசர் கிருஷ்ணசாமி , திருவரங்கம் திருமலை , காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஆஸ்தான புலவர் செந்தில்நாதன் , இராதா தியாகராஜன் ஆகிய ஐவர் கொண்ட அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவை அமைத்தார். 1989 ஆம் ஆண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழு அமைத்தது போலவே 1996 ஆம் ஆண்டு ஆட்சியிலும் ஒரு குழு அம...
ஆத்திக கலைஞர் ! பகுதி -1
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

திமுக ஆட்சிக்கு வந்தால் கோவில்கள் எல்லாம் இடிக்கப்படும் என்று வதந்தி பரப்பப்பட்டது ! அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார் , அவர் அப்படிச்செய்ய மாட்டார் என்றனர் ஒரு தரப்பினர் , இல்லை அவரும் இந்துமதம் எதிர்ப்பாளர் தான் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவார் என்றனர் ஒரு தரப்பினர் , ஆட்சிக்குவந்தவுடன் அப்படியா செய்தனர் ? . நடந்து என்ன என்று பார்ப்போமா ? கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர முதல்வர் அண்ணா ஆணையிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் அங்கேயே சென்று தங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். அப்போது கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைச்சேர்ந்த எதிர்க்கட்சி காசிராமன் , முதல்வர் அண்ணாவையும் அமைச்சர் கலைஞரையும் பாராட்டிப்பேசியது அவைக்குறிப்பில் இன்றும் இருக்கிறது. 1969 அண்ணா மறைந்தார் , தலைவர்கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று அப்பொறுப்பில் அமர்கிறார். இப்பொழுது யூகங்கள் இன்னும் பெரிதாக இருக்கின்றன , அண்ணாவாவது தேவன் என்று ஒருவன் ...