இடுகைகள்

ஓய்வறியா சூரியன் !

பத்திரிகையாளர் கலைஞர்!

படம்
தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே -மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். அவருக்கு பத்திரிகை துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.அவர் ஆரம்பித்ததே பத்திரிகையில் தான், பெரியாரின் அறிமுகமும் கிடைத்தது பத்திரிகையால் தான் பேரறிஞர் அண்ணாவை சந்தித்ததும் அப்படித்தான். இதோ கலைஞர் இப்படித்தான் சந்தித்தார் தன் இதய மன்னன் அண்ணாவை,  1942ஆம் ஆண்டு அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழுக்குக் கலைஞர் 'இளமைப்பலி' என்னும் கட்டுரையை எழுதி அனுப்பினார். இக்கட்டுரை 'திராவிட நாடு' மூன்றாவது இதழில் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகை தந்த அண்ணா அவர்கள் 'இளமைப்பலி' கட்டுரை எழுதிய கலைஞரைச் சந்திக்க விரும்பி அவரை அழைத்து வரச்செய்து நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. 1942ல் 'முரசொலி வெளியீட்டுக் கழகம்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கி மாத இதழாக 'முரசொலி' இதழை வெளியிட்டார் கலைஞர், அதில்   &#

திட்டங்களின் தலைவன்!

கலைஞர் எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன்தான் அணுகுவார். அவர் முதலமைச்சராக இருக்கும்போது படிக்காமல் கையெழுத்து போட்ட கோப்பு ஒன்று கூட இருக்காது. தனது 90 அகவை வரையில் அவர் எந்தெந்த திட்டங்களுக்கு எந்த தேதிகளில் யாருடன்   கலந்தாலோசித்து அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணையில் கையெழுத்துப் போட்டார் என்பதை தேதிவாரியாக கூறக்கூடிய அளவுக்கு அவரது நினைவாற்றல் இருந்தது. ஒரு திட்டம் போட வேண்டுமென்றால் பல்துறை அறிஞர்கள் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் கூட்டிட்டு பேசி பின்பே முடிவெடுத்தார். ஏன் கூறுகிறேன் என்றால் அதற்குப் பின் வந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அப்படி செய்ய மாட்டார்கள் தான் என்ன கூறுகிறேன் ஓ அதைத்தான் அதிகாரிகள் கேட்கவேண்டும் என்ற அதிகார மமதையில் ஆட்சி செய்தவர்கள் அவர்கள். பின்பு ஜெயலலிதா கடைசி காலங்களில் மாறத் தொடங்கினார். அப்படி, தான் மேற்கொண்ட செயலில் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையும், சிரத்தையும், கவனமும் கொண்டிருப்பார். அவர் சிந்தனையில் உதித்து உருவான பல சமூக நீதி சார்ந்த திட்டங்கள் அவரின் விலாசமான பார்வையை நமக்கு உரக்கச் சொல்லும். அதிலும், 1969 முதல் 1976 வர

மின் திட்ட நாயகன் - தலைவர் கலைஞர் !!!

படம்
 தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் கொண்டு வந்த மின் திட்டங்களால் தான் இன்று நாம் மின்  பற்றாக்குறை ஏற்படாமல் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது . திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது! 1️⃣. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970 2️⃣. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970 3️⃣. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971 4️⃣. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971 5️⃣. வைகை 6 MW மின் திட்டம், 1990 6️⃣. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990 7️⃣. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998 8️⃣. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000 9️⃣. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001 . பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011 1️⃣1️⃣. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011 1️⃣2️⃣. 7 சர்க்கரை ஆலைகளில் 162 MW திறன் கொண்ட இணைமின்  உற்பத்தி திட்டங்கள்  1️⃣3️⃣. திருவண்ணாமலை அருணாசலம் சர்க்கரை ஆலையில் 19 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்  1️⃣4️⃣. காஞ்சிபுரம் பழைய சீவரம் 12

கலைஞரும் குறளும் - 2

  திருவள்ளுவர் சிலை! மூன்றாவது முறையாக 1989இல் முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம். காலையில் ஏதோ சிந்தனை வயப்பட்ட வராத தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாக தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர்  கணபதி ஸ்தபதி தொடர்பு கொள்கிறார். அவரிடம் ஸ்தபதியாரே கன்னியாகுமரி கடலில் வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். நாடு இங்கே முடிகிறது என்று கூறுகிறார்கள் அல்லவா! இல்லை; இங்கே நம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்கிற மாதிரி சிலை அமைய வேண்டும். அதுவும் குமரியில் இருந்து வள்ளுவர் நேராக இமயத்தை பார்க்கிற மாதிரி அமைய வேண்டும் என்று கூறுகிறார். ஏன் கன்னியாகுமரியில் வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் முடிவு செய்கிறார்? அதற்கு ஒரு காரணம் உண்டு. அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு, கலாச்சார தூதர்களில் ஒருவராக இருந்தவரை இந்துத்துவ சங்பரிவாரசக்திகள் ஒரு இந்துத்துவத்தின் அடையாளமாக விவேகானந்தரை உருமாற்றினார்கள். இந்தப்பாறைகளில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அலைகள் மோதும் கடப்பாரையின்

கலைஞரும் குறளும் - 1

  கலைஞர் என்றால் தமிழ் இன்று அனைவரும் அறிந்த ஒன்று !அவருக்கு தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்தது உலகம் அறிந்ததே! ஆனால் அவர் குறிப்பாக மிகவும் நேசித்தார் என்பதற்கு சான்று குமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற காலம் மறக்க முடியாத நினைவு சின்னங்களை நமக்காக விட்டு சென்றுள்ளதே அதற்கு சான்று.... அவர் ஏன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தார்? எதற்கு திருக்குறளுக்கும் வள்ளுவனுக்கு ஒரு கோட்டம் கட்டினார்? பார்ப்போம? வள்ளுவரின் திருக்குறளை ஒரு அரசியல் பிரதியாக வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை தலைவர் கலைஞரே அதை தொடங்கி வைத்தார்.  எது தேவையோ அதுவே தர்மம்!என்று எல்லாவற்றையும் தர்மமாகும் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தித்தை திருக்குறளுடன் ஒப்பிட்டு  போர்,வன்முறை, ஆக்கிரமிப்பு,ஆதிக்கம், பிரிவினை வெறுப்புக்கு எதிராகப் பேசும் 'திருக்குறள்' இந்தியா முழுமைக்கும் சாணக்கிய நியாயங்களை இன்று அடைந்திருக்கும் செல்வாக்கையும் ஒப்பிடுகையில் தான் அரசியலுக்கான அறமாகவும் அன்பை வரையறுக்கும் திருக்குறளின் உன்னதமும் அது முன்வைக்கும் மாற்று கருத்தியலும், கலைஞர

கலைஞரும் வேணுகோபால் சர்மாவும்!

  யார் இந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா  ?   பல பேர் அறிந்திடாத பெயர் ,  ஆனால்   அண்ணாவால்   " ஓவியப் பெருந்தகை"   என்று   பட்டம் சூட்டப்பட்டார் ,  தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் இருக்கவே முடியாது ,  இந்தியாவில் உலகத்தில் அத்தனை பேரும் ஒருமுறையேனும் இவரது அந்த ஒரு   படைப்பை   காணாமல் இருக்க மாட்டார்கள்.   திருக்குறளைப்பற்றி   தேடுபவர்கள் இவரின் அந்த   படைப்பைக்   கண்டே ஆக வேண்டும்!   ஆம் அய்யன் திருவள்ளுவர்   திருவுருவ   படத்தை வரைந்தவர் தான் இந்த வேணுகோபால்   சர்மா   இவர்வரைந்த   படத்தைத்தான்   திருவள்ளுவரின்   அதிகாரப்பூர்வமான   படமாக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல்   தமிழ்த்தாய் ,  அறிஞர் அண்ணா ,  முத்துராமலிங்கத் தேவர் ,  காயிதே   மில்லத்   போன்றோர்களது அரிய படங்களையும் வரைந்தவராவார்.     அது   சரி அவருக்கும்   கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ?   ஏன் ஒரு கலைஞருடன்   சேர்த்துக்   குறிப்பிடுகிறேன் ?  பார்ப்போம் ?     ஏறக்குறைய 30   ஆண்டுகள்   திருவள்ளுவரைப்   பற்றி ஆராய்ச்சி செய்து   1959 ல் நிறைவு பெற்ற திருவள்ளுவர்   திருவ

கலைஞரும் தொழு நோயாளிகளும்.........

ஆகஸ்ட் 7 2018, தலைவர் கலைஞர்   நம்மைவிட்டுப்   பிரிந்துவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வரத் துவங்கிவிட்டன.     கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட வருத்தமான   மனநிலையிலிருந்தனர் . அந்தக் காப்பகத்தில் இருபது ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தொழுநோயாளி தழுதழுத்த குரலில் பேசுகையில் , " கலைஞர் இல்லையென்றால் நானும் எனது கூட்டாளிகளும் தெருக்களில் தள்ளப்பட்டிருப்போம் என்று கூறுகிறார்.      " நாங்கள் பிச்சையெடுப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று மிகுந்த மனவருத்தத்துடன் கூறுகிறார் , எங்களுக்கு என்று ஒரு இடத்தையும் கொடுத்து   உடலைப்   பராமரிக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த அந்த   மாமனிதனைக்   கண்டு வருந்துகிறார்.   அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடித்தது ,  எப்படி இப்படி ஒரு திட்டம் கலைஞரிடமிருந்து தோன்றியிருக்கும் ? காரணம் அவர் தமிழகத்தை உளமார நேசித்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தினார். அவரின் பார்வை எப்போதும் சமூகத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனின் வலி நி